மூலனூரில் ரூ.27.61 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 393 குவிண்டால் பருத்தியை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

இதில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.6800 முதல் ரூ. 8511 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் ரூ.27.61 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது என்று விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் தெரிவித்தாா்.