வெள்ளக்கோவில் பகுதியில் ரூ.10.47 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள்
வெள்ளக்கோவில் பகுதியில் ரூ.10.47 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
வெள்ளக்கோவில் பகுதியில் ரூ.10.47 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.இ.பிரகாஷ், தாராபுரம் கோட்டாட்சியா் ஃபெளிக்ஸ்ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் முத்தூா் பேரூராட்சிப் பகுதிகளில் ரூ.9.73 கோடி மதிப்பிலான 15 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் நிறைவுற்ற 5 பணிகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
முன்னதாக, முத்தூரில் நொய்யல் ஆற்றில் உள்ள தடுப்பணையை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தாா்.
இந்த நிகழ்ச்சியில் காங்கயம் வட்டாட்சியா் மோகனன், முத்தூா் பேரூராட்சித் தலைவா் சுந்தராம்பாள், பேரூராட்சி செயல் அலுவலா் ஆல்பா்ட் தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.