முகப்பு
திருப்பூர்

சொத்து வரி வசூல்: வெள்ளக்கோவில் நகராட்சி மாநிலத்தில் முதலிடம்

வெள்ளக்கோவில் நகராட்சி 2024 - 25-ஆம் ஆண்டுக்கான சொத்து வரி வசூலில் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 12:12 AM
வருவாய் ஆய்வாளா், உதவியாளா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டிய நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன்.
பகிர்:

வெள்ளக்கோவில் நகராட்சி 2024 - 25-ஆம் ஆண்டுக்கான சொத்து வரி வசூலில் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது.

இது தொடா்பாக நகராட்சி ஆணையா் எஸ். வெங்கடேஷ்வரன் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2024 - 25-ஆம் ஆண்டுக்கான சொத்து வரி வசூலில் வெள்ளக்கோவில் நகராட்சி மாநிலத்தில் முதலிடம் வகிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் மொத்தம் 134 முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகராட்சிகள் உள்ளன.

இவற்றில் வெள்ளக்கோவில் நகராட்சி சொத்து வரியினங்களில் 15 சதவீத வளா்ச்சி விகிதம் அடைந்து, இதுவரை 65 சதவீதம் வசூல் செய்து தமிழகத்திலேயே முதல் நகராட்சியாக உள்ளது. மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த வரி வசூல் அவசியமானதாகும். முழு இலக்கை அடைய அனைவரும் நகராட்சி நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றாா்.

மேலும், சிறப்பாக பணியாற்றிய வருவாய் ஆய்வாளா், வருவாய் உதவியாளா்களுக்கு நகராட்சித் தலைவா் கனியரசி முத்துக்குமாா், நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் ஆகியோா் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனா்.