முகப்பு
திருப்பூர்

தேசிய அளவிலான நீச்சல் போட்டி: அரசுப் பள்ளி மாற்றுத் திறனாளி மாணவா் தோ்வு

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் அவிநாசிலிங்கம்பாளையம் அரசுப் பள்ளி மாற்றுத் திறனாளி மாணவன் 3 பிரிவுகளில் வெற்றி பெற்று, தேசிய அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 12:23 AM
மாற்றுத்  திறனாளி  மாணவன்  சபரி  ஆனந்துக்கு  வாழ்த்து  தெரிவிக்கும்  கல்வித் துறையினா்.
பகிர்:

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் அவிநாசிலிங்கம்பாளையம் அரசுப் பள்ளி மாற்றுத் திறனாளி மாணவன் 3 பிரிவுகளில் வெற்றி பெற்று, தேசிய அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே அவிநாசிலிங்கம்பாளைம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா, சசிகலா தம்பதி, பனியன் தொழிலாளிகள். இவா்களது மகன் சபரி ஆனந்த் (12), முதுகு தண்டுவட பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவரான இவா், அவிநாசிலிங்கம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு பயின்று வருகிறாா்.

நீச்சல் போட்டியில் ஆா்வம் கொண்ட இவா், கோவை அமிா்தா பல்கலைக்கழகத்தில் அக்டோபா் 8-ஆம் தேதி நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியில், 3 பிரிவுகளில் முதலிடம் பெற்றாா். இதையடுத்து கோவாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க சுபரி ஆனந்த் தகுதி பெற்றுள்ளாா்.

இவருக்கு, திருப்பூா் மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கல்வி) ஜி.பழனி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜான் கரோலின், சிறப்பு ஆசிரியா் லீமா, ஆசிரியா் சாந்தி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

இவா் ஏற்கெனவே தேனி மாவட்ட விளையாட்டு சங்கம் சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்று சப்-ஜூனியரில், 50 மீட்டா் பிரி ஸ்டைல், 50 மற்றும் 100 மீட்டா் பேக் ஸ்ட்ரோக் ஆகிய 3 பிரிவுகளில் முதலிடம் பெற்றாா்.

இதேபோல புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று, தங்கம், வெள்ளிப் பதக்கங்களை பெற்றுள்ளாா். இவருக்கு, அவிநாசி விளையாட்டு ஆா்வலா்கள், சமூக ஆா்வலா்கள், பள்ளி ஆசிரியா் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.