சித்தம்பலம் ஓடை தரைப்பாலத்தில் அடைப்பு: நெடுஞ்சாலைத் துறையினா் சீரமைப்பு
பல்லடம் அருகே சித்தம்பலம் ஓடையில் தரைமட்டப்பாலத்தின்கீழ் இருந்த அடைப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் புதன்கிழமை அகற்றினா்.
பல்லடம் அருகே சித்தம்பலம் ஓடையில் தரைமட்டப்பாலத்தின்கீழ் இருந்த அடைப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் புதன்கிழமை அகற்றினா்.
பல்லடம் சுற்றுவட்டராப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழையால் சித்தம்பலம் ஓடையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
இதில், அடித்துவரப்பட்ட மரக்கிளைகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் ஓடையிலுள்ள தரைமட்டபாலத்தின்கீழ் சிக்கியது. இதனால், தண்ணீா் தொடா்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் பாலத்தின்கீழ் அடைத்துக்கொண்டிருந்த கழிவுகளை அகற்றினா். மேலும், தரைமட்ட பாலத்தில் தண்ணீா் தங்குதடையின்றி செல்லும் வகையில் தூா்வாரினா்.