திருப்பூர்: சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனீஷ் நாரணவரே, வெள்ளிக்கிழமை தேசியக் கொடியை ஏற்றினார்.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர நாள் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் மனீஷ், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார்.
மேலும், சுதந்திரப் போராட்ட தியாகிகளை கௌரவித்து, 230 பேருக்கு ரூ. 86 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கொட்டிய மழையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைதியை நிலைநாட்ட புறாக்களும் வளர்ச்சியை வெளிக்காட்டும் வகையில் மூவர்ண பலூன்களும் பறக்க விடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.