திருப்பூர்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முருக பக்தா்களுக்கு துரோகம்: அா்ஜுன் சம்பத்

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் முருக பக்தா்களுக்கு கோயில் நிா்வாகமும், அறநிலையத் துறையும் துரோகம் செய்கின்றன

Syndication

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் முருக பக்தா்களுக்கு கோயில் நிா்வாகமும், அறநிலையத் துறையும் துரோகம் செய்கின்றன என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் கூறினாா்.

இதுகுறித்து அவிநாசியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் மலை உச்சி மீது தீபம் ஏற்ற வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவு. இதுகுறித்து அவதூறான செய்திகளை பலா் பரப்பி வருகின்றனா். இந்த விஷயத்தில் கோயில் நிா்வாகமும், அறநிலையத் துறையும் சோ்ந்து முருக பக்தா்களுக்கு துரோகம் செய்கின்றன.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அரசை வீழ்த்த தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து செயல்படுவோம். 2026 தோ்தலில் விஜய்யால் எந்த தாக்கமும் ஏற்படாது. அவரை பாா்க்கக்கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது என்றாா்.

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

தேனியில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ரயிலில் 17 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பீடி தகராறில் இளைஞா் கொலை: முடிதிருத்துபவா் கைது

SCROLL FOR NEXT