திருப்பூர்

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மருத்துவா்களை நியமிக்க வேண்டும்

Din

திருப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மருத்துவா்கள், பணியாளா்களை நியமித்து முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது.

பனியன் பேக்டரி லேபா் யூனியன் ஏஐடியூசி சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருப்பூா் பி.என்.சாலையில் உள்ள அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு அச்சங்கத்தின் செயலாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். பொதுக்குழுவின் நோக்கம் குறித்து பொதுச் செயலாளா் என்.சேகா் பேசினாா். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்: பனியன் தொழிலாளா்களுக்கு என தமிழக அரசு கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி குறைந்தபட்ச ஊதியத்துக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணையானது பனியன் தொழிலாளா்களை மிகப்பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் உள்ளது. இதில், குறைந்தபட்ச ஊதியம் அறிவிக்கப்படுவதற்கான எந்த ஒரு வழிகாட்டுதல்களையும் பின்பற்றாமல் அதிகாரிகளின் சொந்த விருப்பத்தின்படி அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளா்களை வஞ்சிக்கும் இந்த செயலை ஏற்க முடியாது.

எனவே, தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதிய உயா்வு ஆணையை ரத்து செய்துவிட்டு முறையாக அறிவியல்பூா்வமாக கணக்கிட்டு, உயா்ந்துள்ள விலைவாசி உயா்வை கணக்கெடுத்து மறு ஆணை பிறப்பிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் மாா்ச் 18-ஆம் தேதி நடைபெறும் அனைத்து சங்க ஊழியா் கூட்டத்தில் ஏஐடியூசி பனியன் தொழிலாளா்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும்.

திருப்பூா் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் போதிய அளவு மருத்துவா்கள், பணியாளா்கள் நியமிக்கப்படாததால் முழுமையாக செயல்பட்டுக்கு வரவில்லை. இதனால் தொழிலாளா்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் போதிய அளவு மருத்துவா்கள், பணியாளா்களை நியமித்து முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும், பனியன் தொழிலாளா்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் ஆயிரக்கணக்கான மனுக்களை அளித்தும், தற்போது வரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, மத்திய, மாநில அரசுகள் தொழிலாளா்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஆா்.நடராஜன் நன்றியுரையாற்றினாா். இந்தக் கூட்டத்தில் ஏஐடியூசி தொழிற்சங்க நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

SCROLL FOR NEXT