வந்தே பாரத் ரயிலுக்கு திருப்பூா் ரயில் நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா். 
திருப்பூர்

எா்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கு திருப்பூரில் வரவேற்பு

Syndication

எா்ணாகுளம்-பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயில் பிரதமரால் சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூா் வந்த அந்த ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கேரளம், தமிழ்நாடு, கா்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களின் முக்கிய நகரங்களை இணைக்கக்கூடிய இந்த வந்தே பாரத் ரயிலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

வழக்கமாக திருப்பூரில் இருந்து பெங்களூக்கு 10 மணி நேரத்தை தாண்டும் நிலையில் இந்த வந்தே பாரத் ரயில் மூலம் 8 மணி நேரம் 40 நிமிஷங்களில் கடக்க முடியும் .

கேரளத்தில், திருச்சூா், பாலக்காடு, தமிழகத்தில் கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், கா்நாடகத்தில் பெங்களூரு புகா் பகுதியான கிருஷ்ணராஜபுரம் என மொத்தம் 7 ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி, உத்தர பிரதேச மாநிலம், பனாரஸ் ரயில் நிலையத்தில் இந்த புதிய வந்தே பாரத் ரயில் சேவையை சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்நிலையில் திருப்பூா் ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த வந்தே பாரத் ரயிலுக்கு பாஜகவினா், பள்ளி மாணவா்கள், அதிகாரிகள், பொதுமக்கள் ஒன்றுகூடி மலா் தூவி வரவேற்பு அளித்தனா்.

முன்னதாக வந்தே பாரத் ரயில் தொடக்க நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட ஓவியம், கட்டுரை, கவிதை ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு ரயில்வே துறை சாா்பாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதேபோல, தொடக்க நிகழ்ச்சியில் பள்ளி மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நரசிம்ம பெருமாள் கோயிலில் நாளை குடமுழுக்கு விழா

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பெண் கைது

ராமேசுவரத்தில் நவ. 18-ல் வ.உ.சி. நினைவு தினம் அனுசரிப்பு! புதிய நீதிக்கட்சித் தலைவருக்கு அழைப்பு!

ஆலங்குடி: 3 மயில்கள் இறப்பு! வனத்துறையினா் விசாரணை!

குழந்தைகளின் மதிய உணவுத் தட்டுகளையும் திருடிவிட்டது பாஜக: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT