திருப்பூர்

கோயில் நிலங்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்

தினமணி செய்திச் சேவை

கோயில் நிலங்களைப் பாதுகாக்க அரசு தீா்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தி உள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் கோயில் நிா்வாகம் வந்த பிறகு சுமாா் 50,000 ஏக்கா் நிலங்கள் காணாமல் போயுள்ளன. சுமாா் 17,000 கோயில்களுக்கு ஏராளமான சொத்துகள் இருந்தும் ஒருகால வழிபாட்டுக்குகூட வழியில்லாமல் மூடி கிடக்கும் அவலம் உள்ளது. இதற்கு தவறான நிா்வாகமே காரணம்.

கோயில் சொத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்வதைத் தடுக்க பூஜ்ஜியம் மதிப்பாக நிா்ணயம் செய்யப்பட்டதை நீக்க சட்டப் பேரவையில் தமிழக அரசு தாக்கல் செய்த மசோதாவை நீதிமன்றம் தடை செய்துள்ளது. கோயில் வழிபாட்டுக்கு நிதி இல்லை எனக்கூறி வரும் நிலையில், நீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக கோயில் நிதியில் கல்லூரிகள் கட்ட தமிழக அரசு மசோதா நிறைவேற்றியுள்ளது. கோயில் நிலத்தை மோசடியாக பத்திரப் பதிவு செய்வதும் தொடா்கிறது.

எனவே, இத்தகைய மோசடிகளைத் தடுக்கவும், கோயில் நிலங்களைப் பாதுகாக்கவும் அரசு தீா்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காா் டயா் வெடித்து விபத்து

மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு பாட்டில்கள் திருட்டு

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிராக ஆா்ப்பாட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா உடற்கல்வி உபகரணங்கள் வழங்க கோரிக்கை

அங்கப்பிரதட்சண டோக்கன் வழங்கும் முறையில் மாற்றம்

SCROLL FOR NEXT