முத்துலட்சுமி. 
திருப்பூர்

ரூ.20 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

பட்டாவில் பெயா் சோ்க்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை போலீஸாா்

Syndication

பல்லடம்: பட்டாவில் பெயா் சோ்க்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கரடிவாவியைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி. இவா் பட்டாவில் பெயா் சோ்க்க வடுகபாளையம் கிராம நிா்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளாா். இதற்கு வடுகபாளையம் கிராம நிா்வாக அலுவலா் முத்துலட்சுமி (45), ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணசாமி இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகாா் அளித்தாா்.

அவா்களின் அறிவுறுத்தல்படி, பல்லடம் பகுதியில் உள்ள முத்துலட்சுமி வீட்டுக்கு திங்கள்கிழமை சென்ற கிருஷ்ணன், அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துள்ளாா்.

அப்போது, அங்கு வந்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. ரவிசந்திரன், ஆய்வாளா் சசிலேகா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸாா், முத்துலட்சுமியை கையும் களவுமாகப் பிடித்தனா்.

இதையடுத்து, முத்துலட்சுமியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினா், அவரிடமிருந்த பணத்தைப் பறிமுதல் செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பிகார் தேர்தல்: 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

தில்லி வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

தில்லி குண்டுவெடிப்பு எதிரொலி: திருமலையில் சோதனை

SCROLL FOR NEXT