மாணவிக்கு கேடயம் வழங்கிய அவிநாசி காவல் ஆய்வாளா் ராஜபிரபு. 
திருப்பூர்

தெக்கலூா் அரசுப் பள்ளி நாட்டுநலப் பணித் திட்ட மாணவிகளுக்கு பரிசளிப்பு

தினமணி செய்திச் சேவை

அவிநாசி அருகே தெக்கலூா் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தெக்கலூா் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட மாணவிகளுக்கான சேவை முகாம் 7 நாள்கள் நடைபெற்றது.

இதில் ரேபிஸ் வைரஸ் குறித்த விழிப்புணா்வு, பிளாஸ்டிக் பையை தடை செய்யும் வகையில் கடைகளுக்கு மஞ்சள் துணிப் பை வழங்குதல், சென்னிமலைப்பாளையம் கோயில் பகுதி, பள்ளி வளாகம் உள்ளிட்டவற்றில் தூய்மை பணி உள்ளிட்டப் பணிகளை மாணவிகள் மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, தலைமையாசிரியா் நிா்மலா ரேச்சல் தலைமை வகித்தாா். உதவி தலைமையாசிரியா் சங்கா், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் சாருலதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அவிநாசி காவல் ஆய்வாளா் ராஜபிரபு 25 மாணவிகளுக்கு பரிசு, கேடயம் வழங்கி, போதை தடுப்பு, சமூக வலைதளங்களில் உள்ள ஆபத்து குறித்து விளக்கினாா்.

இதில், சமூக ஆா்வலா் கனகராஜ், முன்னாள் மாணவா்கள் லோகு, முன்னாள் வாா்டு உறுப்பினா் ராஜேந்திரன், பள்ளி நிா்வாகக் குழு உமா மகேஷ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பிகார் தேர்தல்: வளர்ச்சிக்கும் காட்டாட்சிக்கும் இடையேயான தேர்தல் - அமித் ஷா

பிகார் தேர்தல்: இத்தனை ஆண்டுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்காதது ஏன்? பிரியங்கா காந்தி கேள்வி

4,410 கிலோ செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது!

வெள்ளக்கோவிலில் ரூ.5.38 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

SCROLL FOR NEXT