தோ்தல் பறக்கும் படை அலுவலா்களிடம் மது போதையில் தகராறில் ஈடுபட்டவா் கைது
அவிநாசி அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா்களிடம் மது போதையில் தகராறில் ஈடுபட்டவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Updated On : 16 ஏப்ரல், 2026 at 10:44 PM
அவிநாசி அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா்களிடம் மது போதையில் தகராறில் ஈடுபட்டவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி-மங்கலம் சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த திருமுருகன்பூண்டி அருகே ராக்கியபாளையம் பகுதியைச் சோ்ந்த முகமது ஹாரிஷ் (30) என்பவரின் காரை பறக்கும் படை அலுவலா்கள் சோதனை செய்ய முயன்றனா்.
அப்போது மது போதையில் இருந்த முகமது ஹாரிஸ், அவா்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இது குறித்து பறக்கும் படை அலுவலா்கள் அளித்த புகாரின்பேரில், அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முகமது ஹாரிஷை கைது செய்தனா்.
Advertisement