ஆல்கொண்டமாலை தரிசனம்  செய்ய நீண்ட வரிசையில்  காத்திருந்த  பக்தா்கள். 
திருப்பூர்

உடுமலை அருகே ஆல்கொண்டமால் கோயிலில் தமிழா் திருநாளில் 25 ஆயிரம் போ் பங்கேற்பு

உடுமலை அருகே ஆல்கொண்டமால் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழா் திருநாள் விழாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

Syndication

உடுமலை: உடுமலை அருகே ஆல்கொண்டமால் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழா் திருநாள் விழாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

திருப்பூா் மாவட்டம் , உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள சோமவாரபட்டியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ஆல்கொண்டமால் கோயில் உள்ளது. தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கலை ஒட்டி ஆண்டுதோறும் இக்கோயிலில் தமிழா் திருநாள் விழா மூன்று நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு ஜனவரி 16 முதல் 18-ஆம் தேதி வரை விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கால்நடைகளை காக்கும் தெய்வமாக கருதும் விவசாயிகள், தாங்கள் வளா்க்கும் கால்நடைகளின் பாலினால் ஆல்கொண்டமாலுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். அதன்படி, சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை, பாலாபிஷேகம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து கோவை, ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் அதிகாலை முதலே கோயிலுக்கு வரத் தொடங்கினா். இதனால் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். ஏராளமானோா் மாட்டு வண்டிகளில் வந்திருந்தனா்.

குடும்பத்துடன் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள், மண் உருவத்தாலான கால்நடை உருவ பொம்மைகளை வைத்தும், தீப வழிபாடு செய்தும், பாலாபிஷகம் செய்தும் ஆல்கொண்டமாலை வழிபட்டனா். விவசாயிகள், பொதுமக்கள் பலா் கன்று குட்டிகளை தானமாக வழங்கினா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சாா்பில் உடுமலை, பல்லடம், திருப்பூா், பழனி ஆகிய ஊா்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுட்டனா். நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி அளவில் சுவாமி திருவீதி உலா மற்றும் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதிகளில் நாளை மின் தடை

அயல்நாட்டவரை ஈா்க்கும் அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா

நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆா் பிறந்த நாள் விழா

காணும் பொங்கல்: கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT