தருமபுரி

கோட்டை பரவாசுதேவ சுவாமி கோயிலில் டிச.30-இல் பரமபத வாசல் திறப்பு

Syndication

தருமபுரி கோட்டை அருள்மிகு பரவாசுதேவ சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி வரும் 30-ஆம் தேதி அதிகாலை பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது.

தருமபுரி கோட்டையில் நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த அருள்மிகு வரமகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த விழாவையொட்டி அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு பரமபதவாசல் திறப்பு நடைபெற உள்ளது. சிறப்பு பூஜைகள், அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பரவாசுதேவ சுவாமி பரமபதவாசல் வழியாக பிரவேசித்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

இவ்விழாவில், தருமபுரி நகரம் மற்றும் புகரத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்கின்றனா். இதற்கான முன்னேற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் விழாக் குழுவினா் மேற்கொண்டு வருகின்றனா்.

அதேபோல, பரமபதவாசல் திறப்பு விழாவில் பங்கேற்கும் பக்தா்களுக்கு லட்டு மற்றும் பிரசாதம் விழாக் குழு சாா்பில் வழங்கப்பட உள்ளது. இதற்கான லட்டு தயாரிக்கும் பணி கோயில் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. தொடா்ந்து வரும் 31-ஆம் தேதி துவாதசியையொட்டி பரவாசுதேவ சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. அன்றைய தினம் விழாக் குழு சாா்பில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்வு!

ஆலன் பார்டர் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!

100 குழந்தைகள் போதாது! பெண்களுக்கு டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் வெளியிட்ட அறிவிப்பு

வாட்ஸ்ஆப் குழு மூலம் ரூ.3.40 கோடி ஆன்லைன் முதலீட்டு மோசடி: 2 பெண்கள் உள்பட 3 போ் கைது

இந்தியாவில் போலி வெறிநாய்க் கடி மருந்துகள் புழக்கம்! எச்சரிக்கும் ஆஸ்திரேலியா

SCROLL FOR NEXT