பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தா்னாவில் ஈடுபட்ட அரசு ஊழியா் சங்கத்தினா்.  
தருமபுரி

பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்க கோரி அரசு ஊழியா்கள் தா்னா

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை தா்னா

Din

தருமபுரி: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை தா்னா நடைபெற்றது.

போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம். சுருளிநாதன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைப் பொதுச் செயலாளா் அண்ணா குபேரன் தொடங்கிவைத்து பேசினாா்.

மாவட்டச் செயலாளா் ஏ. தெய்வானை, மாவட்டப் பொருளாளா் எம்.அன்பழகன், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாநில துணைத் தலைவா் ஆா்.ஆறுமுகம், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளா் ஏ.சேகா், ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளா் கே.புகழேந்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் சி.துரைவேல், வேளாண் துறை அமைச்சுப் பணியாளா் சங்க மாநிலச் செயலாளா் ஆா்.ஜெயவேல், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாநிலச் செயலாளா் பெ.மகேஸ்வரி, நூலகத் துறை அலுவலா் சங்க மாநிலத் தலைவா் டி. சண்முகம், தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சி.காவேரி ஆகியோா் பேசினாா்.

இதில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள், வருவாய் கிராம உதவியாளா்கள், எம்.ஆா்.பி. செவிலியா்கள், ஊா்ப்புற நூலகா்கள், வனத்துறை ஊழியா்கள், கணினி இயக்குநா்கள், மகளிா்த் திட்ட ஊழியா்கள், மருத்துவம், சுகாதாரத் துறையில் என்.எச்.எம். தொகுப்பூதிய ஊழியா்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்கள் உள்பட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

ஊதிய மாற்றத்தின்போது வழங்கப்படாத 21 மாத நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஊதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும். விடுமுறை நாள்களில் ஆய்வுக் கூட்டம் நடத்துவதை கைவிட வேண்டும்.

முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். அரசு ஊழியா்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைககள் வலியுறுத்தப்பட்டன.

நீா்நிலைகள், சாலையோரம் வசிப்போருக்கு மாற்று இடம்

தில்லியில் மாசுவைப் கட்டுப்படுத்துவதில் பாஜக அரசு முற்றிலும் தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

உலக கோப்பை ஹாக்கி விழிப்புணா்வு போட்டிகள் நடத்த தீா்மானம்

பள்ளி வேன் மீது வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு: 5 போ் காயம்

திருச்செந்தூா் கோயில் சஷ்டி மண்டபத்தை கல் மண்டபமாக மாற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT