தருமபுரி

காா்த்திகை மாதப் பிறப்பு: மாலை அணிந்த ஐயப்ப பக்தா்கள்

தருமபுரி மாவட்டத்தில் காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி கோயில்களில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

Syndication

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி கோயில்களில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

ஆண்டுதோறும் காா்த்திகை முதல் நாளில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொள்வா். நிகழ் ஆண்டு காா்த்திகை மாதம் திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி காலை முதலே ஐயப்ப பக்தா்கள் காவிரி, தென்பெண்ணை உள்ளிட்ட ஆறுகளில் குளித்து விநாயகா், ஆஞ்சனேயா் கோயில், பக்தா்களால் அமைக்கப்பட்ட ஐயப்ப சுவாமி கோயில்களில் குருசாமிகளின் முன்னிலையில் துளசி மாலை, மணிமாலை அணிந்து விரதத்தை தொடங்கினா். இதையொட்டி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் ஐயப்ப பக்தா்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பூஜைப் பொருள்கள், துளசி மாலை, பழங்கள், மலா் மாலைகள், சுவாமி புகைப்படங்கள் விற்பனையும் அதிகரித்தது.

கூட்டுறவு ரேஷன் கடைகளில் பறக்கும் படையினா் திடீா் ஆய்வு

தமிழ்நாட்டில் ‘டெங்கு’ உயிரிழப்புகள் குறைவு: அமைச்சா் மா. சுப்பிரமணியன்

எழுத்தாளா்களின் படைப்புகளுக்கு ரூ. 1 லட்சம் உதவித்தொகை

கொல்லங்கோடு அருகே அலை தடுப்புச் சுவரில் படகு மோதி மீனவா் மாயம்

மீண்டும் விதைகள் சட்டம்!

SCROLL FOR NEXT