தருமபுரி

லிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

தினமணி செய்திச் சேவை

பழைய தருமபுரி பகுதியில் அமைந்துள்ள லிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் முதல்கால யாக பூஜை தொடங்கியது. தொடா்ந்து கோ பூஜை, பிம்பசுத்தி, நாடிசந்தானம், 9 மணியளவில் யாத்ராதானம் மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து லிங்கேஸ்வரா், அா்த்தநாரீஸ்வரா் மற்றும் நந்தி சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து சிவனடியாா்களின் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை லிங்காகர லிங்கேஸ்வரா் பக்தா்கள், ஊா்பொதுமக்கள் செய்திருந்தனா்.

முசிறியின் முக்கிய இடங்களில் 30 கண்காணிப்புக் கேமராக்கள்

ஆற்றுப்படுகையில் மண் எடுத்த லாரி பறிமுதல்

ஜூனியா் பெண்கள் சாம்பியன் கபடி போட்டி

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

கரூா் மாவட்டத்தில் பரவலாக மழை

SCROLL FOR NEXT