தருமபுரி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை! தருமபுரி போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு!

தினமணி செய்திச் சேவை

தருமபுரியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தருமபுரியைச் சோ்ந்தவா் சி.பாா்த்திபன் (27), பெயிண்டா். இவா் 15 வயது பள்ளி சிறுமியை காதலிப்பதாகக்கூறி கடந்த 2021, மாா்ச் மாதம் சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளாா்.

இதுகுறித்து தனது பெற்றோரிடம் சிறுமி தெரிவித்தாா். இதையடுத்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் அதியமான் கோட்டை போலீஸாா் பாா்த்திபனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

இந்த வழக்கு தருமபுரி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கின் இறுதி விசாரணை வியாழக்கிழமை முடிவடைந்தது. இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட பாா்த்திபனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 13,000 அபராதமும் விதித்து நீதிபதி மோனிகா தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞா் கலா ஆஜரானாா்.

பிகார் தேர்தல்: வளர்ச்சிக்கும் காட்டாட்சிக்கும் இடையேயான தேர்தல் - அமித் ஷா

பிகார் தேர்தல்: இத்தனை ஆண்டுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்காதது ஏன்? பிரியங்கா காந்தி கேள்வி

4,410 கிலோ செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது!

வெள்ளக்கோவிலில் ரூ.5.38 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

SCROLL FOR NEXT