சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
சங்ககிரி, ஜன.8: கன்னந்தேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேசிய பசுமைப் படையின் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் மரக் கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை பள்ளிவளாகத்தில் நடைபெற்றது.
சங்ககிரி, ஜன.8: கன்னந்தேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேசிய பசுமைப் படையின் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் மரக் கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை பள்ளிவளாகத்தில் நடைபெற்றது.
தலைமையாசிரியர் கே.சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்டச் சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் என்.சிவக்குமார் முன்னிலை வகித்தார். சேலத்தைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் டி. பிரபுராம்குமார் சுற்றுச் சூழல் குறித்து பேசினார். பின்னர் அவர் மண்ணில் மக்கக்கூடிய கைப் பைகளையும், மரக் கன்றுகளையும் பொதுமக்களிடம் வழங்கினார்.
மகுடஞ்சாவடி பகுதியில் மாணவ, மாணவிகள் பேரணியாக சென்று பொதுமக்களிடம் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகளை நடப்பட்டன.
மருத்துவர்கள் ராமு, கே.தெய்வம், கோபாலகிருஷ்ணன், ஆசிரியர்கள் வி.தமிழரசன், ஆர்.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.