ஆசிரியர் அடித்ததில் காயம்: மாணவருக்கு சிகிச்சை
ஒசூர், ஜன.8: ஒசூரில், ஆசிரியர் அடித்ததில் காயமடைந்ததாக கூறப்படும் மாணவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒசூரில் உள்ள ராம்நகரைச் சேர்ந்தவர் கணபதி மகன் கார்த்தி (15) (படம்). ஆர்.
ஒசூர், ஜன.8: ஒசூரில், ஆசிரியர் அடித்ததில் காயமடைந்ததாக கூறப்படும் மாணவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஒசூரில் உள்ள ராம்நகரைச் சேர்ந்தவர் கணபதி மகன் கார்த்தி (15) (படம்). ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவரும், சக மாணவர்களும் பள்ளி மைதானத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் மற்றொரு வகுப்புக்கு ஆசிரியர் பத்மநாபன் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். சில மாணவர்கள் மைதானத்தில் இருந்த சிறிய கற்களை தூக்கி வீசி விளையாடிக் கொண்டிருந்தார்களாம். ஆத்திரமடைந்த பத்மநாபன், கார்த்தி தான் கல் வீசியதாக கருதி அடித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் மதியம் வீட்டுக்குச் சென்று தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தினர்.