ஓட்டல், டீ கடைகளில் சோதனை 4 சிலிண்டர், 90 லிட்டர் கெரசின் பறிமுதல்
தம்மம்பட்டி, ஜன. 8: தம்மம்பட்டியில் உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸôர் சனிக்கிழமை ஓட்டல், டீ கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். தம்மம்பட்டி முழுவதும் ஓட்டல், டீ கடைகளில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் உ
தம்மம்பட்டி, ஜன. 8: தம்மம்பட்டியில் உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸôர் சனிக்கிழமை ஓட்டல், டீ கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
தம்மம்பட்டி முழுவதும் ஓட்டல், டீ கடைகளில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் உபயோகப்படுத்துவதாக கிடைத்த தகவலையடுத்து, சேலம் மாவட்ட உணவுக்கடத்தல் தடுப்பு பிரிவு துணை ஆய்வாளர் வேலுமணி தலைமையில்,சார்பு ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் அன்பழகன், திருஞானம் ஆகியோர் அடங்கிய குழுவினர் தம்மம்பட்டியில் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.
இதில் முறைகேடாக வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்ட நான்கு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் வர்த்தக உபயோகத்திற்காக விற்கப்பட வைத்திருந்த 90 லிட்டர் ரேஷன் கெரசினையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.