முகப்பு
தருமபுரி

தருமபுரியில் எஸ்.ஐ. மனைவி தீக்குளித்து சாவு

டும்பத் தகராறில் காவல் உதவி ஆய்வாளரின் மனைவி தீக்குளித்து உயிரிழந்தார்.

Updated On : 12 மே 2013, 5:33 am IST
பகிர்:

டும்பத் தகராறில் காவல் உதவி ஆய்வாளரின் மனைவி தீக்குளித்து உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம், இண்டூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரியாற்றி வருபவர் சகாதேவன் (53). இவரது மனைவி அமுதா (43).

இவர்கள் இருவரும் தருமபுரி வெண்ணாம்பட்டி குடியிருப்பு விஸ்வநாதன் நகரில் வசித்து வருகின்றனர். தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம்.

Advertisement

Advertisement

வெள்ளிக்கிழமையும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த அமுதா, வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அவரைக் காப்பாற்ற முயன்ற சகாதேவனும் தீக்காயமடைந்தார். அலறல் சப்தம் கேட்டு அருகிலிருந்தோர் விரைந்து வந்து இருவரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர், தீவிர சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அமுதா, வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

சகாதேவனுக்கு தருமபுரியிலேயே தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, தருமபுரி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.