கீழானூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அரூரை அடுத்த கீழானூரில் அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினர் புதன்கிழமை அகற்றினர்.
அரூரை அடுத்த கீழானூரில் அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினர் புதன்கிழமை அகற்றினர்.
அரூர் வட்டம், செல்லம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கீழானூரில் அரசுக்குச் சொந்தமான 1.76 ஏக்கர் நிலத்தை அந்தப் பகுதியிலுள்ள விவசாயிகள் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக புகார் தெரிவித்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இதையடுத்து, அரசுக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினர் சர்வே செய்தனர். தொடர்ந்து, அரூர் வட்டாட்சியர் கே. பரமேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வருவாய் ஆய்வாளர் ஆ. சிவஞானம், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் எம். முத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சி. வேலாயுதம் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.