கூட்டுறவுத் தேர்தல்
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள்பட்ட காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள், பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தின்
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள்பட்ட காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள், பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 27-இல் நடைபெற்றது.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இடையூறின்றி நடைபெற்ற வாக்குப் பதிவின்போது, சங்கத்திலுள்ள 324 வாக்காளர்களில் 311 வாக்காளர்கள் வாக்களித்தனர். கிருஷ்ணகிரி அரசுக் கலைக் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கச் செயலர் ஆனந்தன் தேர்தல் அலுவலராகச் செயல்பட்டார். அசாம்பாவிதம் நிகழாமல் இருக்க, காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.