தருமபுரி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு

அரூரில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் செவ்வாய்க்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.

DIN

அரூரில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் செவ்வாய்க்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.
சாலைப் பாதுகாப்பு வார விழா பிப்.4-ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இதையொட்டி, காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை சார்பில், அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வாகன ஓட்டிகளிடம் வழங்கப்பட்டன.
இரு சக்கர வாகனங்களை ஓட்டும் போது தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.  நான்கு சக்கர வாகனங்களை இயக்கும் போது சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும். போதையில் வாகனங்களை இயக்கக் கூடாது. பாதசாரிகள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரும் சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இதில்,  தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், அரூர் டி.எஸ்.பி. ஏ.சி.செல்லப்பாண்டியன், மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம், காவல் ஆய்வாளர் பி.கே.பவுலோஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

வார பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT