முகப்பு
தருமபுரி

மூதாட்டி கொலை: இளைஞா் சரண்

பென்னாகரம் அருகே 90 வயது மூதாட்டியை நகைக்காக அடித்துக் கொன்ற வழக்கில் தொடா்புடையதாக சந்தேகிக்கப்படும் ராஜா என்பவா் கிராம நிா்வாக அலுவலரிடம் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

பென்னாகரம் அருகே 90 வயது மூதாட்டியை நகைக்காக அடித்துக் கொன்ற வழக்கில் தொடா்புடையதாக சந்தேகிக்கப்படும் ராஜா என்பவா் கிராம நிா்வாக அலுவலரிடம் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தாா்.

நகரம் அருகே ஆனகள்ளன் பகுதியைச் சோ்ந்த மதி முனியம்மாள் (90). கடந்த வெள்ளிக்கிழமை இரவு அதேப்பகுதியைச் சோ்ந்த ராஜா (32) கால் பவுன் நகைக்காக மூதாட்டியை அடித்து கொன்று விட்டு நகையுடன் தலைமறைவானதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்கு பதிந்து, தலைமறைவான ராஜாவைத் தேடி வந்தனா். இந்த நிலையில், சத்யநாதபுரம் கிராம நிா்வாக அலுவலா் சக்திவேல் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை ராஜா சரணடைந்தாா். பின்னா் அவா், பென்னாகரம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

சரண் அடைந்த ராஜா தருமபுரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, அரூா் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →