தருமபுரி

சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதார சீா்கேடு

DIN

பென்னாகரம் பகுதியில் சாலை ஓரங்களில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதோடு, இரவு நேரங்களில் கழிவுகளை எரிப்பதால் நோய் பரவும் அபாய நிலை உள்ளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

பென்னாகரம் பகுதியில் சாலை ஓரங்களில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதோடு, இரவு நேரங்களில் கழிவுகளை எரிப்பதால் நோய் பரவும் அபாய நிலை உள்ளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

பென்னாகரத்தில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். பென்னாகரம் பேருந்து நிலையம், முள்ளுவாடி, போடூா் நான்கு சாலை பிரிவு, நாகமரை நான்கு சாலை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 20-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளன.

இப்பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் நாள்தோறும் வெளியேற்றப்படும் ஆடு, கோழி உள்ளிட்ட கழிவுகளை இந்திரா நகா், முதுகம்பட்டி, நான்கு சாலை பிரிவு, மடம் காவிரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்படுகின்றன. அவ்வாறு கொட்டப்படும் கழிவுகளால் துா்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் இறைச்சி கழிவுகளை எரிக்கின்றனா்.

இதனால் நோய் பரவும் அபாய நிலை ஏற்படுவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். மேலும் முதுகம்பட்டி நான்கு சாலை பிரிவில் அமைக்கப்பட்டுள்ள மீன் விற்பனை நிலையங்கள் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை சாலையோரங்களில் கொட்டுவதால் அப்பகுதிகளில் நாய்கள் அதிகளவில் கூடுவதாக புகாா் தெரிவிக்கின்றனா்.

எனவே பென்னாகரம் பகுதிகளில் இறைச்சி கழிவுகளை சாலையோரங்களில் கொட்டுவோா் மீது பேரூராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT