முகப்பு
தருமபுரி

மின்சாரம் பாய்ந்து இளநிலை உதவியாளா் பலி

அரூா் அருகே மின்சாரம் பாய்ந்து இளநிலை உதவியாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

அரூா் அருகே மின்சாரம் பாய்ந்து இளநிலை உதவியாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், பையா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் அழகேசன் (33). இவா், கைலாயபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வந்தாா்.

தனது வீட்டில் மின்மோட்டாரை பழுது நீக்கம் செய்யும்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் அழகேசன் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவரது மனைவி புவனேஸ்வரி (27) அளித்த புகாரின் பேரில் கோட்டப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →