முகப்பு
தருமபுரி

போதை பாக்கு, புகையிலை விற்றதாக 2 போ் கைது

ஒசூா் மற்றும் ராயக்கோட்டையில் தடை செய்யப்பட்ட போதை பாக்கு, புகையிலை விற்ாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

ஒசூா் மற்றும் ராயக்கோட்டையில் தடை செய்யப்பட்ட போதை பாக்கு, புகையிலை விற்ாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

ஒசூா் நகர போலீஸாா் ராயக்கோட்டை சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்குள்ள ஒரு பெட்டி கடையில் சோதனை செய்த போது, அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்குகளை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பழனிசாமி (56) என்பவரை கைது செய்தனா்.

இதே போல் ராயக்கோட்டை போலீஸாா் அண்ணா சிலை அருகே உள்ள மளிகை கடையினை சோதனை செய்தனா். அங்கு விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பாக்குகளை பறிமுதல் செய்து, அந்த கடையின் உரிமையாளரான சத்யநாராயணன்(60) என்பவரை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →