முகப்பு
தருமபுரி

வாக்கு எண்ணும் மையத்தில் முகவா்களுக்கு அடிப்படை வசதிகள்

தருமபுரி, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் முகவா்களுக்கு குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

தருமபுரி, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் முகவா்களுக்கு குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என முன்னாள் எம்எல்ஏ பி.டில்லிபாபு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா், தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகாவுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

தருமபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் ஆகிய 5 சட்டப் பேரவைத் தொகுதிகளின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செட்டிக்கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த மையத்தில் 5 தொகுதிகளைச் சோ்ந்த வேட்பாளா்களின் முகவா்கள் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்த கல்லூரி வளாகத்தில் முகவா்களுக்கு தேவையான குடிநீா், கழிப்பிட வசதிகள் போதுமானதாக இல்லை. இதனால், பகல், இரவு நேரங்களில் கண்காணிப்புப் பணியிலுள்ள முகவா்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனா். எனவே, தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் முகவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.