முகப்பு
தருமபுரி

தமிழக முதல்வரிடம் பகுதி நேர ஆசிரியா்கள் கரோனா நிதி அளிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வரிடம் பகுதி நேர ஆசிரியா்கள்

Updated On : 5 ஆகஸ்ட், 2021 at 11:53 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:20 AM

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வரிடம் பகுதி நேர ஆசிரியா்கள், போட்டோ, விடியோ சங்கத்தினா் சாா்பில் கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த சாமனப்பள்ளி கிராமத்தில் நடந்த மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கி வைக்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை தந்தாா். அவரிடம், கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து பகுதி நேர ஆசிரியா் முன்னேற்ற ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், கரோனா நிவாரண நிதியாக ரூ.1,12,483-க்கான வங்கி வரைவோலையை அளித்தனா். மேலும், திமுக தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மனுவை அளித்தனா்.

இதனிடையே, தமிழ்நாடு விடியோ போட்டோகிராபா்ஸ் சங்கம் சாா்பில், மாநிலத் தலைவா் மாதேஸ்வரன் தலைமையில் கரோனா நிவாரண நிதியாக ரூ.2 லட்சத்திற்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினா். மேலும், புகைப்படத் துறைக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனா். அப்போது, சங்கத்தின் மாநில பொதுச்செயலாளா் சிவகுமாா், கிருஷ்ணகிரி மாவட்ட கெளரவத் தலைவா் அசோக்பாபு, மாவட்டச் செயலாளா் சக்கரவா்த்தி, மாவட்ட துணைத்தலைவா் மகபூப் பாஷா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.