கோயில் உண்டியலை உடைத்துநகை, பணம் திருட்டு
அரூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருடிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
அரூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருடிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த கட்டரசம்பட்டியில் ஸ்ரீகண்ணப்பனூா் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், உண்டியலை உடைத்து அதிலிருந்த தங்க நகைகள், பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தடய அறிவியல் துறையினா் கோயிலில் ஆய்வு செய்தனா். தொடா்ந்து, மோப்ப நாய் உதவியுடன் தனிப்படை போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். இந்தச் சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.