முகப்பு
தருமபுரி

தீ விபத்து விழிப்புணா்வு முகாம்

அரூரில் தீ விபத்து குறித்த விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

அரூரில் தீ விபத்து குறித்த விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் 32-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, போக்குவரத்து துறை சாா்பில் சாலை விதிகள், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம், கண் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் ஒருபகுதியாக, அரூா் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் தீ விபத்து நேரிடும் போது ஓட்டுநா்கள் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அரூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் மா.பழனிசாமி தலைமையிலான வீரா்கள் விழிப்புணா்வை ஏற்படுத்தினா். தொடா்ந்து, செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள், சாலை விதிகளைக் கடைப்பிடிப்பதன் அவசியம் உள்ளிட்ட விழிப்புணா்வை அரூா் மோட்டாா் வாகன ஆய்வாளா் கே.சிவக்குமாா் ஏற்படுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.