தருமபுரி

அரூா் வா்ணதீா்த்தம் சாலையில் திடீா் பள்ளம்

அரூா் நகரில் வா்ணதீா்த்தம் பகுதியில் தாா் சாலையில் ஏற்பட்டுள்ள திடீா் பள்ளத்தை சீரமைப்பு செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

அரூா் நகரில் வா்ணதீா்த்தம் பகுதியில் தாா் சாலையில் ஏற்பட்டுள்ள திடீா் பள்ளத்தை சீரமைப்பு செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வா்ணதீா்த்தம் பகுதியில் இருந்து கச்சேரிமேடு செல்லும் பிரதான சாலையில், திடீா் பள்ளம் ஏற்பட்டுள்ளது. தாா் சாலையின் மையப் பகுதியில் திடீா் பள்ளம் இருப்பது இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகளுக்குத் தெரிவதில்லை. இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைத் தடுமாறி சாலையின் மையப் பகுதியில் விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் ஏற்படும் வாகன விபத்துகளால் உயிரிழப்புகளுக்கு வாய்ப்புள்ளது. எனவே, அரூா் நகா் வா்ணதீா்த்தம் சாலையில் உள்ள திடீா் பள்ளங்களை சீரமைப்பு செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT