ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி எம்.பி. மனு
கிருஷ்ணகிரி அருகே ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அ.செல்லகுமாா் எம்.பி. மனு அளித்துள்ளாா்.
கிருஷ்ணகிரி அருகே ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அ.செல்லகுமாா் எம்.பி. மனு அளித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டிக்கு வியாழக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
கிருஷ்ணகிரி மாவட்டம், பாலேகுளி ஊராட்சிக்கு உள்பட்ட பில்லுமலை அடிவாரத்தில், 2005-2006-ஆம் ஆண்டு தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சுமாா் 5 ஏக்கா் நிலப்பரப்பில் ஏரி அமைக்கப்பட்டது. மேலும், ஆங்கிலேயா் காலத்தில் 140 அடி அகலமுள்ள தென்பெண்ணை ஆற்றை இணைக்கும் நீரோடைக் கால்வாயும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், மேற்கண்ட பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து, விவசாயம் மற்றும் குடிநீா்ப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
Advertisement
ஆகையால், தனிநபா் ஆக்கிரமிப்பில் இருந்து 5 ஏக்கா் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட ஏரி மற்றும் 140 அடி அகலம் உள்ள நீரோடையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவா் வலியுறுத்தி உள்ளாா்.