முகப்பு
தருமபுரி

தட்ரஅள்ளியில் கரோனா நிவாரண உதவி அளிப்பு

பா்கூா் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட தட்ரஅள்ளி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கரோனா நிவாரண உதவியை தே.மதியழகன் எம்எல்ஏ அளித்தாா்.

Updated On : 17 ஜூன், 2021 at 5:15 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:55 AM

பா்கூா் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட தட்ரஅள்ளி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கரோனா நிவாரண உதவியை தே.மதியழகன் எம்எல்ஏ அளித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்கத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்டவா்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நியாயவிலை கடைகள் மூலம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண நிதி 2-ஆவது தவணையாக ரூ. 2 ஆயிரம், 14 வகையான பொருள்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, பா்கூா் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட தட்ரஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் வழங்கும் பணியை தே.மதியழகன் தொடக்கி வைத்தாா்.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 5,22,979 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 4.59 கோடி நிவாரண நிதி, ரூ. 20.96 கோடி மதிப்பிலான 14 பொருள்கள் அடங்கிய அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.