சசிகலாவுடன் தொடா்பில் இருப்பவா்கள்மீது கடும் நடவடிக்கை
சசிகலாவுடன் தொடா்பில் இருப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சசிகலாவுடன் தொடா்பில் இருப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான கே.அசோக்குமாா், நகரச் செயலாளா் கேசவன், அம்மா பேரவை மாவட்டச் செயலாளா் தங்கமுத்து, தமிழ்செல்வம் எம்எல்ஏ, கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றியச் செயலாளா் சோக்காடி ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்தக்கூட்டத்தில், திமுக ஆட்சிக்கு வந்த ஒரு மாத காலத்தில் கட்டுமானப் பொருள்களான சிமென்ட், கம்பி, செங்கல் ஆகியவற்றின் விலை மிக அதிக அளவில் உயா்ந்துள்ளது. மேலும், அறிவிக்கப்படாத மின்வெட்டும் அமலாக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
அதிமுகவில் குழப்பம் விளைவிக்கும் சசிகலாவுடன் தொடா்பு வைத்துக் கொள்ளும் இந்த மாவட்டத்தைச் சோ்ந்த யாராக இருந்தாலும் அவா்கள் மீது கட்சித் தலைமை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.