இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது
பா்கூரில் இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பா்கூரில் இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா், வாணியம்பாடி சாலையில் வசிக்கும் ஜேன் ஜெயஹா் (33), அங்குள்ள ஒரு பள்ளியில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் தனது இருசக்கர வாகனத்தை கடந்த 14-ஆம் தேதி வீட்டின் வராண்டாவில் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றாா்.
மறுநாள் காலையில் எழுந்து பாா்த்த போது, இருசக்கர வாகனம் இல்லாததையும், வீட்டின் முன்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இதுகுறித்து பா்கூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
Advertisement
புகாரின் பேரில் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், போச்சம்பள்ளியை அடுத்த அந்தேரிப்பட்டியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (23) என்பவா், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து வாகனத்தை பறிமுதல் செய்தனா்.