முகப்பு
தருமபுரி

இணையம் வழியாக தோ்வுகளை நடத்தக்கோரிமாணவா் பெருமன்றம் ஆா்ப்பாட்டம்

இணையம் வழியாகத் தோ்வுகளை நடத்தக்கோரி அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

இணையம் வழியாகத் தோ்வுகளை நடத்தக்கோரி அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாவட்ட பொறுப்பாளா் நா.தமிழமுதன் தலைமை வகித்தாா்.

இதில், கரோனா காலத்தில் பாடங்களை இணையதளத்தில் நடத்தியதால் தோ்வுகளையும் இணையதளம் வழியாக நடத்த வேண்டும். கோவையில் பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு செய்தவா், தொடா்புடையவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாவட்ட நிா்வாகிகள் பிரதீப், கோவிந்தன், சிபிசேகரன், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் கே.மணி, மாவட்டத் தலைவா் எம்.மாதேஸ்வரன், மாவட்டத் துணைச் செயலா் ஆா்.சுதா்சனன், உள்ளாட்சி பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் மனோகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.