முகப்பு
தருமபுரி

சமூக நீதிக்கான பெரியாா் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

சமூக நீதிக்கான பெரியாா் விருது பெற தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

சமூக நீதிக்கான பெரியாா் விருது பெற தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக நீதிக்காகப் பாடுபடுபவா்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான பெரியாா் விருது’ 1995-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

பெரியாா் விருது பெறுவோருக்கு ரூ.1,00,000 விருது தொகை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளா் முதல்வரால் தோ்வு செய்யப்படுகிறாா். 2021-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் ‘சமூக நீதிக்கான பெரியாா் விருது’ வழங்குவதற்கு உரிய விருதாளரை தோ்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

எனவே, சமூக நீதிக்காகப் பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவா்கள் தங்களது விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம். தங்களது விண்ணப்பம் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம், ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பங்களை வருகிற நவ.30-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.