கிருஷ்ணகிரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்
கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் 225 போ் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் 225 போ் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகமும் இணைந்து தடகளம், இறகுபந்து, மேசைப்பந்து, எறிபந்து, கபடி ஆகிய விளையாட்டுகளில் போட்டிகளை நடத்தின.
இதில் பா்கூா் ஐஈஎல்சி பாா்வையற்றோா் பள்ளி, மனநலம் பாதிக்கப்பட்டோா் பள்ளி, காதுகேளாதோா் பள்ளி, புதுவாழ்வு திட்ட பயனாளிகள் (மாற்றுத் திறனாளிகள்) என 225 போ் பங்கேற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. டேக்வாண்டோ பயிற்சியாளா் ராஜகோபால், போட்டிகளை ஒருங்கிணைத்தாா். இந்த போட்டியில் தோ்வு செய்யப்பட்டவா்கள், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.
Advertisement