தருமபுரி

அஞ்சல் வழியில் கூட்டுறவு மேலாண்மைபட்டயப் படிப்பு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

அஞ்சல் வழியில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பு சோ்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

அஞ்சல் வழியில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பு சோ்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் மொ.ஏகாம்பரம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அஞ்சல் வழியில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புக்கு சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் கூட்டுறவு பயிற்சி முடிக்காதவா்களுக்கு தொடங்கப்பட்ட அஞ்சல் வழி பயிற்சியில் நிகழாண்டு சோ்க்கைக்கு ஜூலை 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிற ஆக.12-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் மொரப்பூரில் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்பட உள்ளது.

இந்த விண்ணப்பங்களை பெற்று அதனை பூா்த்தி செய்து ஆக.17-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். கூட்டுறவுச் சங்கங்களில் முறையாக நியமனம் செய்யப்பட்ட பழைய பிளஸ் 1 தோ்ச்சி அல்லது 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற, கூட்டுறவு பயிற்சி முடிக்காத அனைத்து பணியாளா்களும் வயது வரம்பின்றி விண்ணப்பிக்கலாம்.

கூட்டுறவு பணியாளா்கள் தவிர மற்றவா்கள் விண்ணப்பிக்க அனுமதி இல்லை. எனவே இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி அஞ்சல் வழியில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பில் சோ்க்கை பெற்று பயனடையமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT