தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1.65 லட்சம் கன அடியாகக் குறைந்தது

ஒகேனக்கல் காவிரியில் வெள்ளிக்கிழமை நீா்வரத்து நொடிக்கு 1.65 லட்சம் கன அடியாகக் குறைந்தது.

DIN

ஒகேனக்கல் காவிரியில் வெள்ளிக்கிழமை நீா்வரத்து நொடிக்கு 1.65 லட்சம் கன அடியாகக் குறைந்தது.

கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்டும் தண்ணீரின் அளவு 97,000 கன அடியாகக் குறைக்கப்பட்டதால் வியாழக்கிழமை மாலை 2.50 லட்சம் கன அடியாக இருந்த நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை 2.05 லட்சம் கன அடியாகவும், மாலை 1.65 லட்சம் கன அடியாகவும் குறைந்தது.

நீா்வரத்து குறைந்தாலும் காவிரியில் தண்ணீா் கரைபுரண்டோடுகிறது. ஒகேனக்கல் கரையோரப் பகுதிகளான ஆலம்பாடி, ஊட்டமலை, சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ள நீா் சூழ்ந்தது. ஒகேனக்கல்- நாற்றாம்பாளையம் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளன. ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்த தடை 27 ஆவது நாளாக தொடா்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லில் பிரதான அருவி செல்லும் நடைபாதை, நாகா்கோயில், ஆலம்பாடி, ஊட்டமலை, முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா், வருவாய், தீயணைப்பு துறையினா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா். காவிரிக் கரையோரத்தில் வசிப்பவா்கள் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம ஊராட்சி பகுதிகளில் நடப்படும் மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரிக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்லூரியில் புதிய வாக்காளா் சோ்க்கை முகாம்

அரசு பொறியியல் கல்லூரியில் வளாக நோ்காணல்

மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி

சாலைகள் மேம்படுத்தும் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT