அரூா் பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை
அரூா் பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூா் பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து பொதுமக்கள் சாா்பில், சமூகம் மற்றும் கல்வி மேம்பாட்டுக்கான இளைஞா் சங்கச் செயலாளா் ஏ.வேலன், தமிழக முதல்வருக்கு அண்மையில் அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம் :
தருமபுரி மாவட்டம், அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 16 ஆவது வாா்டில் 1,200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தக் குடியிருப்பு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தெருச்சாலைகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புப் பகுதியில் போதிய அளவில் கழிவு நீா் கால்வாய் வசதிகள் இல்லை. அதேபோல், மின்கம்பங்கள், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை.
இதனால், இங்குள்ள மக்கள் குடிநீா், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட தேவைகளுக்காக பல்வேறு இடையூறுகளை நாள்தோறும் சந்தித்து வருகின்றனா். எனவே, அரூா் 16 ஆவது வாா்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.