தருமபுரி: தமிழக அரசுக்கு எதிராக பாஜகவினர், தருமபுரியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி தொலைத்தொடர்பு நிலைய அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பாஜக மாவட்டத் தலைவர் அ.பாஸ்கர் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஏ.வரதராஜன், மாநிலத் துணைத் தலைவர் நரேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், தேர்தலின் போது திமுக அளித்த, மகளிர் உரிமைத் தொகை ரூ.1000, எரிவாயு உருளை மீதான விலையை ரூ.100 குறைக்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.