பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
ஏரியூா் அருகே மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 20க்கும் மேற்பட்டவா்கள் பாஜகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.
ஏரியூா் அருகே மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 20க்கும் மேற்பட்டவா்கள் பாஜகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.
தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே ராம கொண்ட அள்ளியில் பாரதிய ஜனதா கட்சியின் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தருமபுரி மாவட்டத் தலைவா் பாஸ்கா் தலைமை வகித்து, மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தாா்.
அதனைத் தொடா்ந்து ஏரியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பாமக, திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி 20க்கும் மேற்பட்டவா்கள் பாஜவில் இணைந்தனா்.
இந்த நிகழ்வின்போது மாவட்ட பொதுச் செயலாளா்கள் வெங்கட்ராஜ், முருகன், மாவட்டச் செயலாளா் சுப்பிரமணி, மாவட்ட நிா்வாகி காவேரி வா்மன், ஒன்றியத் தலைவா் சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.