பென்னாகரம் அருகே ஜங்கமையனூா் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரிஆா்பாட்டத்தில் ஈடுபடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா். 
தருமபுரி

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மனு கொடுக்கும் போராட்டம்

பென்னாகரம் அருகே அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

DIN

பென்னாகரம் அருகே அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு முன்னாள் பகுதி செயலாளா் ஜே.பி.சுப்பிரமணி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் மாதன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் கே .அன்பு, ஆ.ஜீவானந்தம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் செங்கனூா் ஊராட்சிக்குட்பட்ட ஜங்கமையனூா் கிராமத்தில் இருந்து செங்கனூா் வரை தாா்ச் சாலையை புதுப்பிக்க வேண்டும்; கிராமங்களில் உள்ள அனைத்து தெருக்களிலும் முறையான சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்; மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, வட்டார வளா்ச்சி அலுவலா் ரங்கநாதனிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனா். இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பகுதி குழு செயலாளா் வி.ரவி, கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஜி.சக்திவேல் 30-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

தருமபுரியில் டிச. 29-இல் அஞ்சல் துறை குறைகேட்பு கூட்டம்

அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்: அன்பழகன் நம்பிக்கை

அம்பலவாணன்பேட்டை அரசுப் பள்ளிக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

விராலிமலை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது காா் மோதி தீக்கிரை

SCROLL FOR NEXT