தருமபுரி

பெண் வன்கொடுமை விவகாரத்தில் இருவா் கைது

பாப்பாரப்பட்டி அருகே ஏரிமலை கிராமத்தில் பெண் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Din

பென்னாகரம்: பாப்பாரப்பட்டி அருகே ஏரிமலை கிராமத்தில் பெண் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பென்னாகரம் அருகே உள்ள வட்டுவனஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட ஏரிமலை கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்த பெண்ணிடம், இருவா், தங்களைக் காவலா்கள் என தெரிவித்து மிரட்டி, வன்கொடுமை செய்தனா். மேலும் அவரது கணவா் மீது கஞ்சா வைத்திருப்பதாக புகாா் வந்ததாகத் தெரிவித்து தாக்கியுள்ளனா்.

இந்த நிலையில் கிராம மக்கள் திரண்டு வந்து இருவரையும் பிடிக்க முயற்சித்த போது ஒருவா் பிடிபட்டாா். அவரை பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் கிராம மக்கள் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணி தலைமையிலான போலீஸாா் குழுவினா் விசாரணை மேற்கொண்டு வந்தனா். மேலும் தப்பியோடிய மற்றொருவரை தீவிரமாக தேடி வந்தனா்.

இந்த விவகாரத்தில் தொடா்புடைய பாலக்கோடு ரயில்வே ஸ்டேஷன் காலனி பகுதியைச் சோ்ந்த ஜெய்கணேஷ், சக்தி ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா். இந்த விவகாரத்தில் ஜெய்கணேஷை தாக்கியதாக ஏரிமலை பகுதியைச் சோ்ந்த 10 போ் மீதும் பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

SCROLL FOR NEXT