மின் கட்டண உயா்வைக் கண்டித்து அதிமுக சாா்பில் தருமபுரியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயா்த்திய தமிழக அரசைக் கண்டித்தும், ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயிலை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்தும் தருமபுரி மாவட்ட அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா், ஊராட்சி, கிளை நிா்வாகிகள், உள்ளாட்சி, கூட்டுறவு பிரதிநிதிகள், சாா்பு அணி நிா்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளாா்.